அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்





மூலவர்:வைத்தியநாத சுவாமி

தாயார்: அசனாம்பிகை

தல விருட்சம்:வில்வம் மரம்

ஊர்:திட்டக்குடி, கடலூர் மாவட்டம்

தல வரலாறு:ஒரு முறை கவுத முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான் இந்திரன். அங்கு அவருடைய பதிவிரதையான அகலிகை மீது ஆசை கொண்டான். குருவின் மனைவியை அவன் அடைய நினைத்தது, மிகப்பெரிய கேட்டினை அவனுக்குத் தந்துவிட்டது! ஓர் அதிகாலை நேரத்தில், அன்றைய தினத்து அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்காக, முற்றும் துறந்த கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குச் சென்று விட்டார். இதைக் கண்ட இந்திரன் கவுதம முனிவரின் தோற்றத்தில் அவரது ஆசிரமத்திற்குச் சென்றான். இதை ஞானதிருஷ்டியால் கவுதமர் உணர்ந்து விட்டார்.

ஆசிரமத்தை அவர் திரும்பி அடைந்த போது கவுதமர் உருவில் இருந்த இந்திரன், அவரது கண்ணில் படாவண்ணம் பூனையாக மாறினான். இதை அறிந்த கவுதமர், ஞானக்கண் திறக்கும் ஆசானுக்கு நீ தருகிற குருதட்சிணை இதுதானா? சீச்சீ... உன்னுடைய கண்களில் கொப்பளித்துக் கிடக்கிற காமம், நீ எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை உணர்த்துகிறது. மாற்றான் மனைவி மீது ஆசைப்படுகிற உன்னை உலகத்துக்கே தெரியப்படுத்த வேண்டும். உன் அங்கம் முழுவதும் கண்களாகக் கடவது! என்று கடும் கோபத்துடன் சாபமிட்டார்.

அவன் கைகளில், கழுத்தில், தலையில், நெஞ்சில், வயிற்றில் என ஆயிரக்கணக்கான கண்கள் காட்சி அளித்தன. கலங்கிப்போனான் இந்திரன். இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள், குருவே! என்று கண்ணீர் விட்டு வேண்டினான்.அவனுடைய உடலில் இருந்த அத்தனைக் கண்களில் இருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்தது. நெற்றிக் கண்ணைக் கொண்டு உலகைக் காணும் சிவபெருமானால் மட்டும்தான், உமக்கு விமோசனம் அளிக்க முடியும் என்று இந்திரனிடம் சொன்ன கவுதம முனிவர், அகலிகையையும் கல்லாகக் கடவது என்று சாபமிட்டார்.

எவ்வளவு பெரிய பாவியாகிப் போனேன்! இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் தாருங்கள் என் சிவனாரே! என்று, பூவுலகில் உள்ள ஒவ்வொரு தலத்துக்கும் சென்று வழிபட்டான் இந்திரன். வசிஷ்ட முனிவர் பன்னெடுங்காலம் பர்ணசாலை அமைத்து தவம் செய்த திருத்தலத்தை வந்தடைந்தான். தேகம் முழுவதும் கண்களைப் பெற்றதுடன், தீராத நோயையும் சாபமாகப் பெற்றிருந்தவன் அங்கே உள்ள சிவனாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டு வந்தான். நீண்ட தவத்துக்குப் பிறகு இந்திரனுக்கு மனம் இரங்கினார் சிவபெருமான். அவனுக்குத் திருக்காட்சி தந்ததுடன், அவனது சாபத்தையும் போக்கி, வரம் அருளினார்.

அப்போது, என்னைப் போல் பாவம் செய்தும் நோய்களால் அவதிப்பட்டும் அல்லல்படும் மாந்தர்கள், இங்கே இந்தத் தலத்துக்கு வந்தால், அவர்களுக்கும் அருள வேண்டும் என சிவனாரிடம் வேண்டுகோள் வைத்தான் இந்திரன். அப்படியே ஆகட்டும் என அருளினார் சிவபெருமான். இந்திரனிடம் சொன்னபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவரது பாவங்களையும் போக்கி அருள்கிறார், அவர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்கிறார் சிவபெருமான்.

தல சிறப்பு: இந்தத் தலத்தில் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்வதால், சிவனாருக்கு வைத்தியநாதர் என்று திருநாமம். இறைவி அசனாம்பிகை. ஒருகாலத்தில் இந்தப் பகுதி வேங்கை மரம் சூழ்ந்த இடமாகத் திகழ்ந்ததால், வேங்கைவனம் எனப்பட்டது. வேங்கை மரம் என்பது வெற்றிக்கு உகந்த மரம் எனப் போற்றுகின்றனர், முனிவர்கள். எனவே, இந்தத் தலத்து நாயகிக்கு வேங்கவன நாயகி என்றும் ஒரு பெயர் அமைந்ததாம்.

இத்தனைப் பெருமைகளை அறிந்த மன்னர்கள், இந்தக் கோயிலைக் கட்டி ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர். தீராத நோயால் அவதிப்படுவார்கள், செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கிடைக்காதா என்று ஏங்கிக் கலங்குபவர்கள் இங்கு வந்து வைத்தியநாதரையும், அசனாம்பிகையையும் தரிசித்துப் பிராத்தனை செய்தால், பிணிகள் யாவும் அகலும் மற்றும் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்! வசிஷ்டர் தங்கியிருந்து தவம் செய்த இத்தலம், ஆதிகாலத்தில் திருவசிட்டபுரி என அழைக்கப்பட்டது. பிறகு, வசிட்டக்குடி என மாறி, பின்னாளில் அதுவே திட்டக்குடி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5.00 மணி முதல் மணி 9.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

எப்படி செல்வது ? கடலூர்–திருச்சி செல்லும் வழியின் நடுவே திட்டக்குடி உள்ளது. விருத்தாசலத்தில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திட்டக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் கோவில் உள்ளது. ஊரின் நடுவே கோவில் அமைந்துள்ளது. அடிக்கடி அரசு பேருந்து வசதி உள்ளது.



"திருச்சிற்றம்பலம்"



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்