காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும் :





வேதங்களின் தாயே காயத்ரி தேவி. காயத்ரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் இந்த தேவி இருப்பாள். இவர்களுக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. இவள் ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.

சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகிறது காயத்ரி மந்திரம். இது வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதைச் சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள்.

காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் எந்தச் சூழலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுத்தல் ஆகிய பலன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினை தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரிய வரும்.

காயத்ரி மந்திரத்தை காலை 4:30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம். வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம்தான் காயத்ரி.

காயத்திரி மந்திரம் என்பது மனித இனத்தின் மிகப் பழைய மறைநூலாகிய வேதத்தில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள உலகளாவிய எக்காலத்துக்கும் பொருந்தும் வழிபாட்டு வாசகமாகும். அனைவரும் தம் ஆன்மீக உலகியல் நன்மைக்காகப் பக்தியுடன் பாராயணம் செய்வதற்குரிய வழிபாட்டு வாசகம்.



மந்திரம்:



ஓம்

பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்



மந்திரத்தின் ஒலி அதன் பொருளைப் போன்றே மிக மதிப்பு வாய்ந்தது. நாம் இதனை மிகச் சரியான முறையில் ஓத வேண்டும்.

பொருள்:- ஓம் – பரப்ரம்மன். பூர் – பூலோகம் (பஞ்ச பூதங்களிலான இயற்கைப் பொருள்) புவ – புவலோகம் (இடைஉலகம்)(புவ என்பது பிராணசக்தியாகும் , இது உடலை இயக்குவதற்கு இயல்வதாய் செய்கின்றது. இதன் காரணமாகவே வேதங்கள் “பிரக்ஞானம் பிரம்மா” என்று கூறுகின்றன.) ஸுவ – சுவர்க்க லோகம் (விண்ணுலகம், தெய்வத்தின் இருப்பிடம்.) தத் – பரமாத்மா அல்லது பிரம்மம் – சவிதுர் – எந்த உருவினின்றும் இந்த அனைத்துப் பிறந்தன அந்த உருவம், வரேண்யம் – வழிபடுவதற்குத் தகுதியானது. பர்க்கோ – சுடரொளி (தெய்வீகப் பேரொளி, அறிவை வழங்கும் ஒளி) தேவஸ்ய – தெய்வீக மெய்ம்மை தீமஹி – தியானிக்கின்றோம் தியோ –புத்தி (அறிவு) யோ – எது ந – நம் ப்ரசோதயாத் – அறிவுறுத்து.

வேறு விதமாகவும் காயத்திரி மந்திரம் மொழிபெயர்க்கப்படலாம்.(ஓம்) உடல், ஆன்ம, தெய்வீக வாழ்வுக்குரிய, (பூர் புவ சுவஹ) உலகங்களுக்கு மூலாதாரமாய் உள்ள (சவிதுர்) போற்றுதற்குரிய யாவருக்கும் மேலான தெய்வீக மெய்மையின், (வாரேண்யம், தேவஸ்ய) தெய்வீகப் பேரொளி மீது, (பர்க்கோ) நாம் தியானிக்கின்றோம். (தீமஹி) நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம், (தத்) நம், (ந) அறிவுக்கு, (தியோ) ஒளியூட்டட்டும் (ப்ரயோதயாத்)

காயத்திரி மந்திரத்தை வெளிப்படுத்தியவர்:

காயத்திரி மந்திரம் விசுவாமித்திர முனிவரால் வெளிப்படுத்தப்பட்டது. இவரே ‘ஆதித்ய கிருதயம்’ மந்திரத்தின் மூலம் சூரிய வழிபாட்டு மறைப் பொருளை இராமனுக்குப் போதித்து வழிப்படுத்தியவர் ஆவார். (சத்ய சாய்வாயவஹினி – ப 184). இந்த மந்திரத்தை உண்மையுடன் திரும்பத்திரும்ப கூறிய பொழுது பல அரிய ஆயுதங்கள் பல அரிய ஆயுதங்கள் அவருடைய விருப்பத்திற்கு இணங்கிப் பயன்தருவதற்குக் காயத்திரி மந்திரம் விசுவாமித்திரருக்கு பயன்பட்டது. இந்த வழியால் பெறப்பட்ட ஆற்றலின் மூலம் விசுவாமித்திரர் விண்ணுலகிற்கு இணையான வேறோர் உலகத்தையே படைக்க முடிந்தது. சத்ய சாய்வாயவஹினி – ப 184

காயத்திரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கி கூறப்படுவதாகும். இந்த மந்திரம் எல்லையற்ற ஆற்றலுடையது. இது துடிப்பதிர்வுடைய நூற்பாவாகும். இந்த மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. அதனால் உண்மையிலேயே வியக்கத்தக்க அளவற்ற ஆற்றல்களைக் கொண்டது. மனித இனத்தின் மிகப்பழைய நூலாகிய வேதத்தில் காணப்படுகிறது. (ரிக் வேதம் 111.62.10) காயத்திரி வேதங்களின் தாய். இந்த மந்திரம் எங்கெல்லாம் ஓதப்படுகின்றதோ அங்கெல்லாம் காயத்திரி இருப்பாள். காயத்திரிக்கு காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என மூன்று பெயர்கள் உண்டு. இம்மூன்றும் நம் ஒவ்வொருவருள்ளும் உள்ளன. காயத்திரி புலன்களின் தலைவி, சாவித்திரி உயிரின் தலைவி, சரஸ்வதி பேச்சின் தலைமைத் தெய்வமகளாகவும் விளங்குகின்றாள். இம்மூவரும் எண்ணம், சொல், செயல்களின் தூய்மையைக் குறிப்பவர்கள் (திரிகரணசுத்தி) எண்ணம், சொல், செயல்களின் தூய்மையையும் இசைவையும் கடைப்பிடிப்போரிடம் மூவரும் நிலைபெற்றுவாழ்வர்.

காயத்திரி மந்திரம் மூன்று பகுதிகளையுடையதாகக் கருதலாம். கடவுளைப் புகழ்வதற்கான மூன்று மூலப் பகுதிகளையும் (போற்றுதல், தியானம், வழிபாட்டு வாசகம்) இம்மந்திரம் கொண்டுள்ளது. மந்திரத்தின் முதல் ஒன்பது வார்த்தைகளும் கடவுளைப் போற்றுதலைக் குறிப்பன.

‘ஓம்! பூர் புவ சுவஹ

தத் சதுர் வரேண்யம்

பர்கோ தேஸ்ய’

‘தீமஹி’ தியானம் பற்றியது.

‘தியோ யோநப்ரசோதயாத்;’ எல்லா ஆற்றல்களையும் திறமைகளையும் நமக்கு வழங்குமாறு வேண்டும் வழிபாட்டு வாசகமாகும்.

இம்மூன்று பகுதிகளையும் வேறு விதமாக விபரிக்கலாம்.


1. சவிதாவுக்குப் புகழ்ச்சி – தெய்வீகம் முதலில் புகழப்படுகின்றது. (எதனின்றும் எல்லாப்பொருட்களும் பிறந்தனவோ அது என்பதே சவிதா என்பதன் பொருளாகும்.)

2. சவிதா மீது தியானம் – தெய்வீகம் மிக்க வணக்கத்துடன் தியதனிக்கப்படுகின்றது.

3. சவிதாவுக்கு வழிபாட்டு வாசகம்.

நம்முள் உள்ள பகுத்தறியும் ஆற்றலான (புத்தி) அறிவினை வலிவுகூட்டி விழிப்படையச் செய்யத் தெய்வத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. வேத சாரமாக வேதங்கள் கற்பிக்கும் அனைத்தின் பிழிவாக் காயத்திரி மந்திரம் கருதப்படுகின்றது.

நம்பிக்கையுடன் முறைப்படி தவறாமல் காயத்திரி மந்திரத்தை ஓதுபவர்க்கு காயத்திரி மந்திரம் நோய்களைத் தீர்க்கும்.

(சர்வரோகநிவாரணி காயத்ரி)

காயத்ரி மந்திரம் எல்லாத் துன்பங்களையும் களையும்

(சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி)

காயத்ரி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்

(சர்வ வாஞ்சா ஃபலஸரி காயத்ரி)

நான்கு வேதங்களிலும் பொதிந்துள்ள நான்கு மையக்கருத்துக்களான நான்கு மகா வாக்கியங்களை காயத்திரி மந்திரம் குறிப்பாகச் சுட்டுகின்றது. அவ்வாக்கியங்கள்

1. ப்ரக்ஞானம் பிரம்மா மனத்தின் விழிப்பு நிலையே ப்ரம்மன் ஆகும்.

(ரிக் வேதத்தின் ஐத்ரேய உபநிஷத்)

2. அஹம் பிரம்மாஸ்மி நான் பிரம்மன்

(யஜுர் வேதத்தின் பிருகதாரணிய உபநிஷத்)

3. தத் த்வம் அசி நான் அதுவாக உள்ளேன்

(சாம வேதத்தின் சாண்டோக்கிய உபநிஷத்)

4. அயம் ஆத்மா பிரம்மா இந்த ஆத்மாவே பிரம்மன்

(அதர்வண வேதத்தின் மண்டுக்கிய உபநிஷத்)

காயத்திரி மந்திரத்தை வைகறை, நண்பகல், மாலைக் காலங்களில் ஓதுதல் சிறந்த பயனைக் கொடுக்கும். இக்காலங்கள் சந்தியா காலங்கள் எனப்படும். நாம் காயத்திரியை எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஓதலாம். ஓதுபவன் எல்லா நேரங்களிலும் தன் இதயம் தூய்மையாய் உள்ளதை உறுஞதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பகவான் நியமனப்படி நாம் :

1. காயத்திரி மந்திரத்தை எளிதானதாகக் கருதக் கூடாது.

2. எல்லாக் காலங்களிலும் நம் இதயம் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

3. உண்மையே பேச வேண்டும்.

4. அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்

5. எண்ணம், சொல், செயல்களில் தூய்மையும் இசைவும் இருத்தல் வேண்டும். (திரிகரணசுத்தி)

6. எப்போதும் உதவுக – என்றும் துன்புறுத்தற்க

7. உங்கள் அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுக.

(விளைவுகள் பற்றி எந்தக் கவலையுமின்றி செய்வோன் நானே என்ற பொய்யான உணர்வுமின்றி செயலாற்றல்)

நாம் நீராடும் போது நமது உடலைச் சுத்தம் செய்கின்றோம். அதே நேரத்தில் நாம் காயத்ரியை ஓதுவதனால் நம் மனத்தையும் அறிவையும் தூய்மைப் படுத்தலாம். உணவு உண்ணுமுன் படுக்கையிலிருந்து எழும்போது படுக்கைக்கு செல்லும் போது காயத்திரியை ஓதும்படி பகவான் பாபா கூறுகின்றார்.

காயத்ரி மந்திரத்தை ஓதிய பின் ‘சாந்தி’ என மூன்று முறை சொல்ல வேண்டும். இதன் மூலம் நம்மிடமுள்ள உடல் உள்ளம் ஆன்மா ஆகிய மூன்றிற்கும் சாந்தி அல்லது அமைதியைத் தரும்படி வேண்டுதல் செய்கின்றோம்.

காயத்ரியே அன்னபூரணி, தெய்வத்தாய் அனைத்து வாழ்வினையும் இயக்கும் தெய்வீக ஆற்றல். காயத்ரி ஐந்து முகம் கொண்டவராக வர்ணிக்கப்படுகின்றார்.

1. ஓம் – பிரணவம் ஓர் முகம் இந்தப் பிரணவ தத்துவம் எட்டுவகையான செல்வங்களைக் குறிக்கும் (அஷ்ட ஐஸ்வர்யங்கள்)

2. பூர் புவ சுவஹ – இரண்டாவது முகம்

3. தத்சவிதுர் வரேண்யம் – மூன்றாவது முகம்

4. பர்கோ தேவஸ்ய தீமஹி – நான்காவது முகம்

5. தியோ யோந ப்ரசோதயாத் – ஐந்தாவது முகம்

காயத்ரி மந்திரத்தின் இந்த ஐந்து வகையான தன்மைகளும் நம் ஒவ்வொருவருள்ளும் உள்ளன. நாம் காயத்ரி மந்திரத்தை ஏற்றுக்கொண்டு அதனை இடைவிடாது ஓத வேண்டும். ஏனெனில் நாம் பஸ்ஸிலோ, காரிலோ, ரெயிலிலோ விமானத்திலோ கடையிலோ சாலையிலோ எங்கிருந்த போதும் அக்காயத்ரி மந்திரம் தீமையினின்றும் நம்மைக் காக்கும். உணவுக்கோ இருப்பிடத்திற்கோ அலைய வேண்டியதில்லை.



"திருச்சிற்றம்பலம்"



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்