முன் ஜென்மம் உண்டா?





ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!

சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்.

அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான்.

ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான்.

அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள்.

பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்.

சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது.

அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.

தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.



"திருச்சிற்றம்பலம்"



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்