அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்!!! இயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம். வேதிப்பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்ல. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை சருமத்திற்கு, கூந்தலுக்கு மற்றும் உடலுக்கு கேடுகள் விளைவிப்பவை என்றும் அனைவரும் நன்றாக அறிவோம்.

எனவே, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி வரும் இயற்கையான பொருட்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உடலை அழகாகப் பராமரிப்பதற்காக, சில அழகுக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைச் செய்து வந்தால் உடல் மற்றும் முகம் இயற்கை வழியிலேயே அழகு பெறுவதுடன், மனதுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியை அளிக்கும். எனவே இவற்றை உடலை இயற்கை வழியில் மேலும் மெருகேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டு பின்பற்றிப் பாருங்களேன்!!!

சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க் :

சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க் சுருக்கமில்லாத சருமத்துடன் எப்போதும் இளமையாகத் தோன்றுவதையே அனைவரும் விரும்புவோம்.

எலுமிச்சைச் சாறு, தேன், சாத்துக்குடிச் சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொண்டு, சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிருக்கு இயற்கையிலேயே, ப்ளீச் செய்யும் குணம் உண்டு என்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இக்கலவையைப் பயன்படுத்தினால் காணாமல் போகும்.

முட்டையின் வெள்ளைக் கரு :

முட்டையின் வெள்ளைக் கரு முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை மென்மையாக தோற்றமளிப்பதற்கு மற்றுமொரு அழகுக் கலவையும் உண்டு. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக ஒரு கரண்டியினால் கலக்க வேண்டும். அதன்பின் அந்த கலவையை கண்கள், தாடைகள், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பூச வேண்டும். பின் அவை நன்றாக காய்ந்த பிறகு கழுவித் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு தவறாது செய்து வந்தால், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவை மெல்ல மறைவதைக் காண முடியும். சுருக்கங்கள் மறைவதனால், இளமையான தோற்றமும் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய்களை வட்டவடிவிலான துண்டுகளாக வெட்டி, அவற்றைக் கண்கள் மீது சிறிது நேரம் வைத்து வந்தால், அது கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் நீங்கும். மேலும் இத்தகைய வெள்ளரிக்காயைக் கொண்டு சிறந்த ஃபேஷியல் மாஸ்க் செய்யலாம். அதற்கு சிறிய வெள்ளரிக்காயை, ஓட்ஸ் உடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, தயிருடன் கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் :

பழங்கள் மற்றும் காய்கறிகள் செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

திராட்சை :

திராட்சை திராட்சைப் பழங்கள் ஒரு அற்புதமான க்ளின்சர்களாகச் செயல்படும். எனவே அவற்றை எடுத்து சாதாரணமாக முகத்தில் அழுத்தித் தேய்த்தாலே போதும். முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்.

எலுமிச்சை, முட்டை ஃபேஸ் மாஸ்க் :

எலுமிச்சை, முட்டை ஃபேஸ் மாஸ்க் முகத்தில் பருக்களும், சிறு கட்டிகளும் நிறைந்து அவஸ்தைப்படுவோருக்கு பயன் தரும் சிறப்பான மாஸ்க். எலுமிச்சை சாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இக்கலவையை முகத்தில் பிரச்சனை உள்ள பகுதிகளில் தடவி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால், முகத்தில் உள்ள பருக்களும் சிறு கட்டிகளும் நீங்கும்.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் :

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் பளிச்சிடும் நிறத்தில் சருமம் பிரகாசிக்க மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூள், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பால், சந்தனப் பவுடர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இக்கலவையை தினமும் முகத்தில் பூசிவந்தால், முகம் மாசு மருவின்றிப் பொலிவுடன் திகழும்.

ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க் :

ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க் எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தின் விளைவாக முகத்தில் பரு மற்றும் தோல் தடித்தல் உண்டாகும். மேலும் சருமத்திலுள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக எண்ணெய் சுரக்கும். ஈஸ்ட்டுடன் சிறிது தயிரை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிவதைக் குறைத்து பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.

தேயிலைத்தூள் பை :

தேயிலைத்தூள் பை கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை (tea bags) 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும். இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு. மேலும் இந்த முறை தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும் இது உதவுகிறது.

சோள மாவு மற்றும் வாழைப்பழம் :

சோள மாவு மற்றும் வாழைப்பழம் சோள மாவும், வாழைப்பழங்களும் நம் வீடுகளில் எப்போதும் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு, பாதங்களில் தடவி, பின்பு பாதங்களை 30 வினாடிகளுக்கு மசாஜ் செய்தாலே போதும். உடனடியாகவே பாதங்கள் மென்மையாவதை உணர முடியும். சோள மாவு ஒரு சிறந்த எக்ஸ்ஃபொலியேட்டராக (exfoliator) செயலாற்றி, பாதங்களிலுள்ள சருமத்தின் கடினத்தன்மையைப் போக்கும். மேலும் இதில் உள்ள வாழைப்பழமானது பாதங்களை மென்மையாக்கும்.

தேயிலைத்தூள் பை :

தேயிலைத்தூள் பை கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு, ஈரமான தேயிலைத்தூள் பை (tea bags), வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால், உடனடியான பலனை உணரலாம்.

மாய்ஸ்சுரைசர் :

மாய்ஸ்சுரைசர் கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ்சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொருமுறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.

அழகான உதடுகளை பெற :

அழகான உதடுகளை பெற உதடுகள் வறண்டு போகும் தன்மை உடையவையாக இருந்தால், பாதாம் எண்ணெய் தடவிவாரவும். குளிர்காலங்களில் உதடுகள் வெடிக்கின்றனவா? ஆமெனில் சிறிது தேனைத் தடவலாம். இயற்கையான அழகுடன் உதடுகளைப் பெற வேண்டுமென விரும்பினால், உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்