சிக்கன் ரெசிப்பீஸ்

சிக்கன் மஞ்சூரியன்தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ,பூண்டு - அரை கப் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது,குட மிளகாய் - 2 பெரிதாக நறுக்கியது,வெங்காயம் - 1 நறுக்கியது,சோயா சாஸ்- 1 ஸ்பூன்,தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்,மிளகு தூள் - 2 ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்,உப்பு- தேவையான அளவு ,எண்ணெய் -தேவையான அளவு ,வெங்காயத்தாள் - தேவையான அளவு ,
ஊற வைக்க எலும்பில்லாத சிக்கன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்,எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,மிளகாய் தூள் - 2 ஸ்பூன்,1 முட்டையின் வெள்ளை கரு, கார்ன் பிளவர் மாவு - 2 ஸ்பூன்,மைதா மாவு- 2 ஸ்பூன்,அரிசி மாவு - 2 ஸ்பூன்,உப்பு - தேவைாயன அளவு


செய்முறை: முதலில் எலும்புகளை நீக்கிய சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முட்டையை கலக்கி ஊற வைக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின்பு கடாயில் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக மெதுவான தீயில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். .கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், குட மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள் அனைத்தையும் போட்டு கிளறவும். கார்ன் பிளவர் மாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அதில் போட்டு 3 நிமிடம் மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கிளரி இறக்கவும்நாட்டுகோழி ரசம்தேவையானவை:நாட்டு கோழி - அரை கிலோ,சின்ன வெங்காயம் – 15,சீரகம் – 1 ஸ்பூன்,மிளகு – 2 ஸ்பூன்,பச்சை மிளகாய் – 1,தக்காளி – 2 ,இஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்,பட்டை, லவங்கம் – தலா 1,,தனியாத்தூள் – 1 ஸ்பூன்,மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்,கருவேப்பிலை , மல்லி இலை - தேவையான அளவு,உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக விடவும். இறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும்.சிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்மொறு மொறு மிளகாய் சிக்கன்தேவையானவை:சிக்கன் - 1 கிலோ,மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி,இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,பச்சை மிளகாய் - 2,காய்ந்த மிளகாய் - 4,எலுமிச்சை - அரை மூடி,கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்),எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,கருவேப்பிலை - 2 ஆர்க்கு,உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.1 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.நாட்டு கோழிச்சாறுதேவையானவை: நாட்டுக்கோழி சிக்கன் - அரைக் கிலோ,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 2 ,மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 2 ஸ்பூன்,தனியா - 1 ஸ்பூன்,வெந்தயம் - அரை ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2,கடலைப்பருப்பு -1 ஸ்பூன்,நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்,மல்லி இலை - சிறிதளவு,கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்).தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்..அத்துடன் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை போட்டு வதக்கவும்.சிக்கன் வதங்கியதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விடவும் .பின் 10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து மல்லிஇலை தூவவும்.சுவையான கோழிச்சாறு ரெடிகேரளா சிக்கன் வறுவல்தேவையானவை:சிக்கன் - அரை கிலோ,சோம்பு - 1 ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 7 ,பூண்டு - 10 பல்,கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்.

செய்முறை:முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி வைத்து கொள்ளவும். பின்பு மிக்ஸியில் காய்நத மிளகாய், சோம்பு , பூண்டு, உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். கழுவி வைத்துள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். தண்ணீர் முற்றிலும் வற்றி சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்கவும். கேரளா ஸ்டைல் சிக்கன் வறுவல் ரெடிநாட்டுகோழி சுக்காதேவையானவை: நாட்டு கோழி சிக்கன் – அரை கிலோ,சின்ன வெங்காயம் – 30,இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 3 ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்,உப்பு - தேவைாயன அளவு .
அரைக்க
தேங்காய் துருவியது – 5 ஸ்பூன்,கசகசா – 1 ஸ்பூன், முந்திரிபருப்பு – 5.
தாளிக்க
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்,பட்டை – 2 துண்டு,கிராம்பு – 2.

செய்முறை: சிக்கனை எலும்பு நீக்கி சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அரைக்க கொடுத்தவற்றை பரபரப்பாக அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும் பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும். 10 நிமிடம் கழித்து திறந்து குக்கரில் இருந்தவற்றை கடாயில் ஊற்றி நன்கு வற்ற விடவும். ஓரளவு கெட்டியானவுடன் அரைத்த மசாலா பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு பிரட்டி விடவும். நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல்தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்,மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்,மிளகாய் தூள் - 1 ஸ்பூன், மல்லித் தூள் - 1 ஸ்பூன், மிளகுத் தூள் -2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,
தாளிப்பதற்கு.
பட்டை - சிறு துண்டு,பிரியாணி இலை -1,சோம்பு - 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மீதி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள் சேர்த்து நன்கு பிரட்டி பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி போட்டு 15 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளரி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு சிக்கன் மிளகு வறுவல் ரெடிசிக்கன் மிளகு கறிதேவையானவை: சிக்கன் - அரைக் கிலோ, பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 2,பூண்டு - 5 பல்,இஞ்சி - சிறிய துண்டு,மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்,மல்லித்தூள் - 2 ஸ்பூன்,மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்,பட்டை - 1,கிராம்பு - 2, கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.கறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும். நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி குழம்பு நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.மதுரை ஸ்டைல் சிக்கன் குழம்புதேவையானவை: சிக்கன் - 1/2 கிலோ,வெங்காயம் - 2 ( நறுக்கியது), தக்காளி - 2 ( நறுக்கியது), பச்சை மிளகாய் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லி - சிறிது,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - 5 ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 6, மல்லி - 2 ஸ்பூன், மிளகு - 1 ஸ்பூன், சோம்பு - 1/2 ஸ்பூன்,கசகசா - 1 ஸ்பூன், உடைத்த கடலை - 1 ஸ்பூன், பட்டை - 1 இன்ச், கிராம்பு - 3, தேங்காய் - 1 பத்தை, தாளிப்பதற்கு... ,கடுகு - 1/2 டீஸ்பூன், பிரியாணி இலை - 1, சோம்பு - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2

செய்முறை:முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின்பு அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் போட்டு , சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு அடுப்பை 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்தால் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்ததும் இறக்கி . கொத்த மல்லியைத் தூவி மூடி வைக்கவும்நாட்டுக்கோழி குழம்புதேவையானவை: நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோ, சி.வெங்காயம் - கால் கிலோ,தக்காளி - இரண்டு,பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க,எண்ணை -தேவையான அளவு,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு,
அரைக்க:
சோம்பு - 1 ஸ்பூன்,சீரகம் - ஒரு ஸ்பூன்,மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்,பூண்டு - 10 பல்,இஞ்சி - சிறிய துண்டு,காய்ந்த மிளகாய் - 15,மல்லி - 3 ஸ்பூன், தேங்காய் துருவல் - 1 பத்தை,கசகசா - ஒரு டீ ஸ்பூன்

செய்முறை: முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும்.சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும். மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.வெங்காயதம் தக்காளியை பொடியாக நறுக்கவும். இப்போது கோழிக் கறியை நன்கு கழுவவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும். வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும். ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் ரூ சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்