குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலியல் ஆதாரம்

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.





புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன்.

அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார். இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார்.

அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார். ‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது.

அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம். ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.





புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும்.





அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார். எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர்.

‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது. நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



குருதி ஆதாரம்

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை நிரூபிக்க சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மானிட இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாக குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாக குறிப்பிடுகிறார்.அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.



அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.



இராமாயணத்தில் இடைச்சங்கம்:

1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.

2. கால ஒற்றுமை – ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.

3. திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.



நிலவியல்:

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.



பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்:

1. சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம். உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும் அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.

2. சடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள்என இலக்கியம் கூறுகிறது. மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு.

3. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் ‘குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் உள்ளது.

4. இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)அதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூரிய லெமூரியா (20 மில்லியன் வருடங்களுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் வருடங்கள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய லெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று.



சித்தரியல்:

சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,


1. காகபுசுண்டர் (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது)

2. அகத்தியர்

3. போகர்

4. மகாவதார பாபா



மயன் பற்றிய குறிப்புகள்:

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.

ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்

மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.

வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்

வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது.



நூல் பதிவுகள்:

குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.


கடல் கொண்ட தென்னாடு

கா. அப்பாத்துரையின் வாதங்கள்


1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.

2. மொழி அடர்த்திதமிழர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்தனர் என்பதற்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்லச் செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.இக்கருத்தை ஏற்கனவே தேவநேயப் பாவாணர் என்றவரும் கூறியிருக்கிறார்.

3. ஞாலவியல் அட்டவணை





அதன்படி லெமூரிய நாகரிகத்தை அகழாய்வு மூலம் நிரூபிக்க குறைந்தது 15,000 அடி அகழாய்வு செய்ய வேண்டிவரும்.

4. காலவணை(ஸ்காட் எலியட்)





இந்த அட்டவணையின் படி இலெமூரியாவின் காலம் கி.மு.2,00,000-50,000 வரை செல்லும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.



வரலாறு

குமரிக்கண்டத்தின் வரலாறு

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் வாதங்கள்

கடலில் மூழ்கிய கண்டத்தின் ஆய்வு

குமரிக்கண்டம்: உண்மையா?

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றால் என்ன? பாகம் – 1 & பாகம் – 2

பாகம் – 1 ருத்ராட்சம் பற்றி சில அறிய தகவல்கள்

பாகம் – 2 ருத்ராட்சம் மகிமை

பாகம் – 3 ருத்ராட்சம்மும்! மருத்துவமும்!

பாகம் – 4 ருத்ராட்சம் முகங்களும் அதன் பலன்களும்

பாகம் – 5 உருத்திராக்கம் (ருத்ராட்சம்) பற்றிய அறிவியல் முடிவுகள்

பாகம் – 6 ஏழு முக ருத்ராட்சம்..!

பாகம் – 7 உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராட்சம்

பாகம் – 8 பத்ம புராணம் கூறவது

பாகம் – 9 ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

பாகம் – 10 ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம்

ஓம் பற்றிய சில தகவல்

அரோஹரா என்ற சொற்களின் சிறப்பு

நமசிவாய என்ற சொற்களின் சிறப்பு

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க' என்பதன் விளக்கம் தெரியுமா?

காயத்ரி மந்திரமும் அதன் சிறப்பும்

தெய்வத்தை வழிபட ஏற்ற நாள் எது? ஆலய தரிசனம் செய்வது எப்படி?

பிரதோஷம் அன்று எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்!

பவுர்ணமி கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

பைரவர் ஒரு கண்ணோட்டம்

ஐயோ” ஏன் சொல்லக்கூடாது?

எமதர்மராஜாவின் அரண்மனையில் சித்ரகுப்தனின் தனி அறை

தேங்காய் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்

எந்த திசையில் எந்த தெய்வத்தை வணங்கலாம்

சிவன் கோயில்களில் வழிபடும் முறை

விஷ்ணு கோயில்களில் வழிபடும் முறை

மூலவருக்கும் நந்திக்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது ஏன்?

கீதையின் சிறு விளக்கம்

திருஷ்டி சில தகவல்கள்

சிவாலய அன்னதானத்தின் சிறப்பு

தொட்டாற்சிணுங்கி கதை

விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது

கந்தபுராணம் சில தகவல்கள்

பிதுர் தர்ப்பணத்தின் தகவல்கள்

பிரணவேஸ்வரர் யார் தெரியுமா ?

கோமடி சங்கின் சிறப்பு

துர்க்கையை வணங்கும் வழிமுறைகள்

108 பற்றிய சில அறிய தகவல்

ஐயப்பன் கோயிலின் பதினெட்டு படி ரகசியங்கள்

தெட்சிணாமூர்த்தி பற்றிய சில அறிய தகவல்கள்

ஆண்டிக்கோல முருகனை தரிசனம் செய்யலாமா?

தேங்காய் உணர்த்தும் உண்மைகள்

ராமாயணத்தில் அரிய வேண்டிய சில கதாபாத்திரங்கள்

துளசியின் மகத்துவம்

சிவராத்திரியும் சில விளக்கங்களும்

காளிக்கு மக்கள் பயந்தது ஏன்?

முன் ஜென்மம் உண்டா?

ஜோதிடம்

பாகம் – 1. ஜோதிடம்

பாகம் – 2. ஒரு ஜாதகம் கணிக்க தேவையானவை

பாகம் – 3. நவக்கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்

பாகம் – 4. ஜாதக கட்டமும் நட்சத்திர பாதங்களும்

பாகம் – 5. ராசி அதிபதிகள்

பாகம் – 6. நட்சத்திர அதிபதிகள்

பாகம் – 7. ராசிகளின் தன்மைகள்

பாகம் – 8. லக்கினம் சில தகவல்

பாகம் – 9. கிரகங்களின் பார்வைகள், பலன் தரும் காலம்

பாகம் – 10. கிரகங்களின் பொது குணம்

பாகம் – 11. ஜாதகத்தில் வீடுகள் பற்றிய மேலும் சில தகவல்

பாகம் – 12. லக்கினங்களின் தகவல்கள்

பாகம் – 13. நவக்கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்

பாகம் – 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்

பாகம் – 15. சூரியன் பற்றி சில தகவல்

பாகம் – 16. சந்திரன் பற்றி சில தகவல்

பாகம் – 17. செவ்வாய் பற்றி சில தகவல்

பாகம் – 18. புதன் பற்றி சில தகவல்

பாகம் – 19. குரு பற்றி சில தகவல்

பாகம் – 20. சுக்கிரன் பற்றி சில தகவல்

பாகம் – 21. சனி பற்றி சில தகவல்

பாகம் – 22. ராகு பற்றி சில தகவல்

பாகம் – 23. கேது பற்றி சில தகவல்

எந்த தமிழ் மாதத்தில் பிறந்தால் என்னன்ன குணங்கள் வரும்

ஆலய தரிசனம்

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

பழநி முருகன் கோவில்

சித்த மருத்துவ குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: அகத்தி,அத்திப்பழம்,அன்னாசி

மருத்துவ குறிப்புகள்:ஆரஞ்சுப் பழம்,வெண்டைக்காய்

மருத்துவ குறிப்புகள்: ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: இஞ்சி

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி

மருத்துவ குறிப்புகள்: உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்

மருத்துவ குறிப்புகள்: உருளைக்கிழங்கு

மருத்துவ குறிப்புகள்: எலுமிச்சம் பழம்

மருத்துவ குறிப்புகள்: கண்டங்கத்திரி,கத்திரிக்காய்

மருத்துவ குறிப்புகள்: கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: கிராம்பு

மருத்துவ குறிப்புகள்: வாரம் ஒரு முறை காலிபிளவரும் சாப்பிடுங்க, கொய்யா பழம்

மருத்துவ குறிப்புகள்: சித்த மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க, சீதளத்தை போக்கும் காய், தர்பூசணிப் பழம்

மருத்துவ குறிப்புகள்: சீத்தாப்பழம்

மருத்துவ குறிப்புகள்:சீரகம், தாவரத் தங்கம் – காரட், திராட்சைப் பழம்

மருத்துவ குறிப்புகள்: தேன்

மருத்துவ குறிப்புகள்: வெந்தயம்

மருத்துவ குறிப்புகள்: நெல்லிக்காயின் மகிமை, பப்பாளி

மருத்துவ குறிப்புகள்: பரம்பரை வீட்டு வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: பழங்களின் மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்:நோயற்ற வாழ்வு தரும் சாறுகள்

மருத்துவ குறிப்புகள்: பீட்ரூட்

மருத்துவ குறிப்புகள்: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

மருத்துவ குறிப்புகள்: பேரீச்சம் பழம், வேப்பம்பூ

மருத்துவ குறிப்புகள்: காய்ச்சல்

மருத்துவ குறிப்புகள்: ஆஸ்துமா

மருத்துவ குறிப்புகள்: வாசனை வைத்தியம்

மருத்துவ குறிப்புகள்: எளிய மருத்துவக் குறிப்புகள்

மருத்துவ குறிப்புகள்: இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

மருத்துவ குறிப்புகள்: பொன்னாங்கண்ணி, மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை

மருத்துவ குறிப்புகள்: மஞ்சள் மகத்துவம்

மருத்துவ குறிப்புகள்: மலர்களும் மருந்தாகும்

மருத்துவ குறிப்புகள்: மாம்பழம், மாதுளம் பழம்

மருத்துவ குறிப்புகள்: முடி வளர சித்தமருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: முல்லைப் பூவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: மூலிகை நீர்

மருத்துவ குறிப்புகள்: மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்

மருத்துவ குறிப்புகள்: ரோஜாவின் மருத்துவ குணம்

மருத்துவ குறிப்புகள்: வாழை மருத்துவம்

மருத்துவ குறிப்புகள்: விளாம் பழம்

மருத்துவ குறிப்புகள்: வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்: வெண்டைக்காய், வைட்டமின் குறைபாடு நீங்க

மருத்துவ குறிப்புகள்: வெற்றிலை

மருத்துவ குறிப்புகள்: காய்கறிகளின் வயாகரா

அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்:சித்த மருத்துவம்

அழகுக் குறிப்புகள்: நரைமுடி, கூந்தல் அழகு

அழகுக் குறிப்புகள்: அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

அழகுக் குறிப்புகள்: பெண்களுக்கான எளிய அழகுக் குறிப்புகள்!

அழகுக் குறிப்புகள்: உடல் அழகு

அழகுக் குறிப்புகள்: ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகாகத் திகழ்வதற்கான சில எளிய அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள்: அழகுப் பராமரிப்பில் தேனின் பயன்கள்

அழகுக் குறிப்புகள்: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

அழகுக் குறிப்புகள்: ஸ்லிம்மான இடை அழகை பெற இதை செய்யுங்க!

அழகுக் குறிப்புகள்: தொப்பை குறைக்கும் பயிற்சி

அழகுக் குறிப்புகள்: காலையில் முட்டை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்கும் வெந்தயம்

அழகுக் குறிப்புகள்: உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள்

அழகுக் குறிப்புகள்: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கப் தண்ணீர் குடிங்க

சைவம்

30 வகை குழம்பு

30 வகை இட்லி!

25 வகை பிரியாணி!

அசைவம்

சிக்கன் ரெசிப்பீஸ்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புக்கு


Your message has been sent. Thank you!
முகவரி
மின்னஞ்சல்
tamilanthagaval7@gmail.com
சமூக வலைத்தளம்